முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நானும் மாதவிடாய் நாட்களை சந்திக்கிறேன்!… ஊதியத்துடன் விடுமுறை அவசியமற்றது!… ஸ்மிருதி இரானி!

09:32 AM Dec 14, 2023 IST | 1newsnationuser3
Advertisement

மாதவிடாய் நாட்களை சந்திக்கும் ஒரு பெண்ணாக கூறுகிறேன், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமற்றது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக மாநிலங்களவையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று கூறியுள்ளார்.

மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரிசெய்யக்கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று கூறியுள்ளார்.

"மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாதவிடாயை எதிர்கொள்ளும் சராசரி பெண்ணாக நான் இதை கூறுகிறேன்" என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இது தொடர்பான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.

Tags :
periodssmriti iraniஊதியத்துடன் விடுமுறை அவசியமற்றதுகுறைபாடு அல்லமாதவிடாய்ஸ்மிருதி இரானி
Advertisement
Next Article