விராட் கோலி உணவகத்தில் ஒரே ஒரு மக்காச்சோளத்தின் விலை இவ்வளவா..? - வைரலாகும் பதிவு..
விராட் தனது ஆட்டத்தின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்துள்ளார். நாட்டில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் ஒருவராக விராட் அறியப்படுகிறார். விராட் கோலியின் இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகைக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கும் நிறுவனங்களும் உள்ளன. விராட் உணவு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். விராட் ஒன்8 கம்யூன் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த உணவகங்கள் ஹைதராபாத், மும்பை, பெங்களூர், புனே மற்றும் கொல்கத்தா போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிசினஸைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஒன்8 கம்யூன் உணவகத்திற்குச் சென்ற அனுபவத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். ஹோட்டலுக்கு சென்ற அந்த பெண் வேக வைத்த மக்காச்சோளம் ஒன்றை ஆர்டர் செய்தார். அதன் விலை ரூ.525. விலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர், சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த பதிவை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மொத்தம் 13 லட்சம் பேர் இந்த ட்வீனை பார்த்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், மக்காச்சோளம் ஒன்று ரூ.10. , தட்டுக்கு 100 ரூபாய், டேபிள்க்கு ரூ. 50, நாற்காலிக்கு 50, ஏசிக்கு ரூ. 250, வரி ரூ. 65 ஆக மொத்தம் ரூ.525 ரூபாய் என வேடிக்கையாக பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், ஆர்டர் செய்வதற்கு முன், உங்களுக்கு விலை தெரியும், நீங்கள் ஏன் ஆர்டர் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
Read more ; ரூ.800 கோடியில் அரண்மனை.. பல சொகுசு கார்கள்.. நடிகர் சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா..!