இந்த நாட்களில் கணவன் - மனைவி உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.. ஏன் தெரியுமா?
திருமண உறவில் தாம்பத்யம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எத்தனை நாட்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர் தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து மாறும்படும். எனினும் குறிப்பிட்ட சில நாட்களில் கணவன் - மனைவி இடையே தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அவை எந்தெந்த நாட்கள் தெரியுமா?
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று கணவன் மனைவி உடலுறவு கொள்ளக்கூடாது என்றும் ஒருவருக்கொருவர் விலகியிருக்க வேண்டும் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கணவன் - மனைவி தாம்பத்ய உறவில் ஈடுபட்டால், அது திருமண வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அதே போல் ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி மற்றும் அஷ்டமி திதியில் கணவன் மனைவி உடலுறவு கொள்ளக்கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் உடலுறவு கொள்வது குழந்தைகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மேலும் மகாளய பட்சக்காலத்தில் கணவன் - மனைவி உடலுறவு கொள்ள கூடாது. இந்த காலக்கட்டத்தில் உடல், மனம், செயல் மற்றும் பேச்சால் தூய்மையாக இருப்பது மிகவும் அவசியம். மகாளய பட்ச காலத்தில் கணவன் மனைவி உடலுறவு பற்றி சிந்திக்கக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் உடலுறவு கொள்வது பித்ருக்களை கோபப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
நவராத்திரி நாட்கள் மிகவும் புனிதமானவை. சிலரின் வீடுகளில் கலசம் வைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் போது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது..
அதே போல் நீங்கள் விரதம் இருக்கும் நாளில் கட்டாயம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையான மனதுடன் செய்யும் வழிபாடு மட்டுமே பலனைத் தரும். விரதம் இருப்பவர் விரத நாளில் முழு பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே விரத நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ள கூடாது.