2-வது மனைவி சமைத்த உணவை முதல் மனைவிக்கு கொடுத்த கணவன்..!! வீட்டில் வெடித்த சண்டை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து முதல் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அரும்பாக்கம், பாஞ்சலி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் திலிப் சிங் (வயது 50). இவரது மனைவி பார்வதி (வயது 45). இவர், தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் நிலையில்,இவரது கணவர் திலிப் சிங் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து நேபாளத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு திலிப் சிங் தனது 2-வது மனைவியுடன் பார்வதி வீட்டில் தனி, தனி அறையில் வசித்து வந்துள்ளார்.
இதனால், கணவருக்கும் பார்வதிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், சம்பவத்தன்று அதிகாலை திலிப் சிங் இரண்டாவது மனைவி தயார் செய்த சாப்பாட்டை பார்வதியிடம் கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளார். ஆனால், அதை சாப்பிட மறுத்துள்ளார் பார்வதி. இதனால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த திலிப் சிங், பார்வதியை கல் மற்றும் கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த பார்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பார்வதி கொடுத்த புகாரின் பேரில், அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், கணவர் திலிப் சிங்கை போலீசார் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Read More : ”சொன்ன வேலையை சரியா பண்ணமாட்டீங்களா”..? புஸ்ஸி ஆனந்த் மீது கோபப்பட்ட விஜய்..? கட்சிக்குள் சலசலப்பு..!!