முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சகோதரிடன் ஓடிய கணவர், அம்மா-வுடன் ஓடிய மாமனார்" நீதி கேட்டு காவல் நிலையத்தில் பெண் புகார்!

A shocking incident came to light in Bihar's Muzaffarpur. A crying woman narrated her ordeal to the police that her husband eloped with her younger sister, while her father-in-law also eloped with her mother.
02:48 PM Jun 24, 2024 IST | Mari Thangam
Advertisement

பிகார் மாநிலம் முசாபர்பூர் காவல் நிலையத்தில்,  தனது கணவர் தனது தங்கையுடன் வாழ்ந்து வருவதாகவும், மாமனாரும் தனது தாயும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறி பெண் புகார் அளித்தார்.

Advertisement

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ”பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கிராமத்தில் பிராஜி பகத்தின் மகன் சோட்டு குமாரை  2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு எனது தங்கைக்கும், கணவருக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது.

பின்னர் அவர், எனது சகோதரியை ஜூன் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு டெல்லி சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து எனது தாயிடம் தெரிவிக்க வீட்டிற்கு சென்றேன். நீதி கேட்க என் தாய் மாமியார் வீட்டிற்குச் சென்றார், மாமியார் வீட்டிற்கு சென்ற அவர் திரும்பி வரவில்லை. பின்னர், தனது தாய் தனது மாமனாருடன் ஓடிப்போனதையும், இருவரும் டெல்லியில் ஒன்றாக வாழ்ந்து வருவதையும் கண்டறிந்தேன்” எனத் தெரிவித்தார்.

கணவருடன் சென்ற தங்கையும், மாமனாருடன் சென்ற அம்மாவும் இப்போது என அழைப்பை எடுக்கவில்லை. ஒரு பெண் குழந்தையுடன் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனக்கு நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Read more ; நடக்காத கார் ரேஸ் – செலவு செய்த ரூ.8 கோடி 25லட்சத்தை தமிழக அரசிடம் கேட்கும் சென்னை மாநகராட்சி..!

Tags :
BiharBihar PoliceHusband eloped with my sistermother with father-in-law
Advertisement
Next Article