ஒரே நேரத்தில் கணவனும், கள்ளக்காதலனும்..!! வலி தாங்க முடியல..!! விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பலோட் பகுதியில் வசித்து வருபவர் அபிஜித் தேவன். இவரும் இந்துஜா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இந்துஜா அபிஜித்துடன் மதிய உணவு சாப்பிட்ட நிலையில், அதன் பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதையடுத்து, அபிஜித் தேவன் அறைக்கு சென்று பார்த்தபோது, மனைவி ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவரை மீட்டு உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இந்துஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், சம்பவம் அறிந்து வந்த போலீசார், இந்துஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறிக்கையில், இந்துஜா இறப்பதற்கு முன் தாக்கப்பட்டதில் காயம் அடைந்ததாகத் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அபிஜித் தேவனை காதலிப்பதற்கு முன்பு, இந்துஜா அஜாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இந்துஜா அஜாஸை பிரிந்தார். இதையடுத்து, இந்துஜா அபிஜித்தை திருமணம் செய்து கொண்டு அஜாஸிடம் பேசி வந்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அஜாஸ் இந்துஜாவை தனது காரில் சங்குமுக் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இந்துஜாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி அஜாஸ் அவரை தாக்கியுள்ளார். இந்துஜாவை பழிவாங்க நடந்ததையும் அபிஜித்திடம் கூறினார். இதனால், இந்துஜாவையும் அபிஜித் அடித்துள்ளார். காதலன் மற்றும் கணவர் கொடுத்த மன உளைச்சலால் இந்துஜா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் அபிஜித் தேவன், அஜாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Read More : கனமழை எதிரொலி..!! மாணவர்களே உங்கள் மாவட்டத்திற்கு இன்று விடுமுறையா..? முழு விவரம் உள்ளே..!!