திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் இல்லை!. மத்திய அரசு பதில்!
Central government: 18 வயதுக்கு குறைவான திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ஒரு பெண் 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டால், அவரது கணவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமாக கருதப்படுமா? என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,’ பாரதிய நியாய சன்ஹிதா, 2023ன் பிரிவுகள் 74, 75, 76 மற்றும் 85 மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 ஆகியவை இந்த பிரச்னைக்கு போதுமான தண்டனைஅளவு தீர்வை வழங்குகின்றன. அதன் மூலம் திருமண அமைப்பிற்குள் ஒரு பெண்ணின் உரிமை, கண்ணியம் பாதுகாக்கப்படுகிறது. எனவே திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை’ என்று தெரிவித்தார்.