இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மேற்கு வங்க நகரம்...!
இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மேற்கு வங்க நகரங்கள்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வருடாந்திர தூய்மை கணக்கெடுப்பான 'ஸ்வச் சர்வேக்ஷன்' படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா இந்தியாவின் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அசுத்தமான நகரங்களில் 10 இடங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவை.ஹவுராவுக்கு அடுத்தபடியாக கல்யாணி, மத்தியகிராம், கிருஷ்ணாநகர், அசன்சோல், ரிஷ்ரா, பிதான்நகர், கான்ச்ரபாரா, கொல்கத்தா மற்றும் பட்பாரா போன்ற அசுத்தமான நகரங்கள் என கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் பட்பராவைத் தவிர, மீதமுள்ள எட்டு நகரங்கள் தூய்மையில் 1,000க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. மேகாலயாவின் ஷில்லாங், பீகாரில் உள்ள ககாரியா மற்றும் சீதாமர்ஹி ஆகிய நகரங்களும் தூய்மை தரவரிசையில் மோசமான இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நகரங்கள் அவற்றின் தூய்மை மற்றும் சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன. மாறாக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் சூரத், மகாராஷ்டிராவில் நவி மும்பை, ஆந்திராவில் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசத்தில் போபால்.