யூடியூப் வீடியோக்களுக்கான கூகுள் GEMINI AI திறனை பயன்படுத்துவது எப்படி.?
GEMINI AI: பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூகுளின்(Google) ஜெமினி செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது . இவற்றை பயன்படுத்தி YouTube வீடியோக்களையும் சுருக்கலாம் இது எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
கூகுள் ஜெமினி AI, சாட் ஜிபிடி போன்ற சாட்போட்களின் காலத்தில் பயனர்களால் பயனடையக்கூடிய பல்வேறு செயல்பாடுகளை வழங்குகிறது. மேலும் இவை கூகுள்(Google) வொர்க் ஸ்பேஸ், YouTube கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளுடன் இணைக்கப்பட்டு பணிகளை மேம்படுத்துவதற்காக புதுமையான அம்சங்களுடன் ஜெமினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் ஜெமினியை பயன்படுத்தி யூடியூப் எக்ஸ்டென்ஷன் இயக்குவது எப்படி.?
உங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் ( மொபைல் அல்லது டேப்லெட்) ஜெமினி பயன்பாட்டை தொடங்கவும் .
இப்போது மேல் வலது மூலையில் அமைந்துள்ள உங்கள் ப்ரோபைல் படத்தைத் டேப் செய்யவும்.
மெனுவிலிருந்து எக்ஸ்டென்ஷன் என்பதை தேர்வு செய்யவும்.
யூடியூப் வீடியோவை அணுக:
இதற்கு முதலில் யூடியூப் செயலி அல்லது இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளவும்.
பின்னர் நீங்கள் ஜெமினி சமரைஸ் செய்ய விரும்பும் வீடியோவை இயக்கத் தொடங்க வேண்டும்.
நீங்கள் பிரவுசரை பயன்படுத்தி இருந்தால் வீடியோவின் URL ஐ முகவரிப் பட்டியில் இருந்து நகலெடுக்கலாம்.
நீங்கள் யூடியூப் செயலியை பயன்படுத்தி இருந்தால் வீடியோவின் கீழே வைக்கப்பட்டுள்ள 'பகிர்' பொத்தானைத் கிளிக் செய்து, URL ஐ நகலெடுக்க வேண்டும்.
ஜெமினியை பயன்படுத்தி சமரி உருவாக்குவது எப்படி:
உங்களுக்கு விருப்பமான பிரவுசர் அல்லது மொபைலில் ஜெமினி செயலியை ஓப்பன் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் காப்பி செய்த வீடியோவின் URL- ஐ நியமிக்கப்பட்ட பேஸ்ட் பாக்ஸில் பேஸ்ட் செய்ய வேண்டும்.
அதே டெக்ஸ்ட் பாக்ஸில் வீடியோவை சுருக்கு என்பதை டைப் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் வீடியோ உள்ளடக்கத்தின் சுருக்கத்தை ஜெமினி ஜெனரேட் செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.
முக்கியமான பரிசீலனைகள்:
தேவையான தலைப்பு: ஜெமினி சாட்பாட் தலைப்புகளைச் சார்ந்த வீடியோக்களை சமரைஸ் செய்கிறது. எனவே ஒவ்வொரு வீடியோவையும் சுருக்க இயலாது.
மொழி ஆதரவு: ஒவ்வொரு மொழியும் முழுமையாக ஆதரிக்கப்படாததால், மொழி உள்ளீட்டின் அடிப்படையில் சுருக்கப்படுத்தல் அம்சம் வெவ்வேறு முடிவுகளை அளிக்கும்.
துல்லியம் மறுப்பு: ஜெமினி துல்லியமான முடிவுகளை வழங்குவதற்காக தீவிரமாக பாடுபடும் போது இணையதளத்தில் உள்ள பெரிய மொழி மாதிரிகளின் உள்ளார்ந்த வரம்புகள் காரணமாக பிழைகள் ஏற்படலாம். எனவே உருவாக்கப்பட்ட சுருக்கங்களை விளக்கும் போது பயனர்கள் விவேகத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.