சஷ்டி விரதம் கடைபிடிக்கும் வழிமுறைகள்..!! என்னென்ன சாப்பிடலாம்..? எப்படி விரதம் இருப்பது..?
முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களில், கந்தசஷ்டி விரதம் மிக முக்கியமான விரதமாகும். ஒவ்வொரு மாதமும் சஷ்டி என்ற திதி வருகிறது. சஷ்டியில் விரதம் கடைபிடித்து முருகனை வழிபாடு செய்வதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவற்றுள் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டி என்று பெயர். மகா சஷ்டி விரதம் கடைபிடிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண வரன் அமையும், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோய்கள் குணமாகும், படிப்பு, வேலை என எந்த பிரச்சனையாக இருந்தாலும் முருகன் தீர்த்து வைப்பார் என்பது மக்களின் நம்பிக்கை. நம்பிக்கையோடு விரதம் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் முருகன் அவர்கள் கேட்கும் வரத்தை நிறைவேற்றுவார்.
விரதம் கடைபிடிக்கும் வழிமுறைகள்:
* விரதம் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப விரதம் கடைபிடிப்பது நல்லது.
* ஒரு வேளை உணவு சாப்பிட்டு இரண்டு வேளை சாப்பிடாமல் இருக்கலாம்.
* இரண்டு வேளை சாப்பிட்டு ஒரு வேளை சாப்பிடாமல் இருக்கலாம்.
* 3 வேளையும் விரதம் கடைபிடித்தால் நெய் வேத்தியம் செய்த பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
* சிலர் இளநீர் மட்டுமே குடித்து விரதம் கடைபிடிப்பார்கள்.
* சிலர் மிக தீவிரமாக விரதத்தை கடைபிடிப்பார்கள். அவர்கள் விரதத்தின் 7 நாட்களிலும் மிளகு மட்டுமே சாப்பிடுவார்கள். முதல் நாளில் ஒரு மிளகு, அடுத்த நாளில் இரட்டிப்பு செய்து இரண்டு மிளகு என அடுத்தடுத்த நாட்களில் இரட்டிப்பு செய்து 7 நாட்களுக்கும் மிளகு மட்டும் சாப்பிடுவார்கள்.
* சிலர் உப்பு இல்லாத உணவாக தயிர் சாதம் மற்றும் பால் சாதம் மட்டுமே சாப்பிடுவார்கள்.
* இன்னும் ஒரு சிலர் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு அரிசி, பருப்பு தவிர்த்து விரதம் கடைபிடிப்பார்கள்.
விரத காலத்தில் செய்யக் கூடாதவை:
* விரத நாட்களில் காலை நேரத்தில் எக்காரணம் கொண்டும் தூங்க கூடாது.
விரதம் தொடங்குவது எப்படி..?
* நவம்பர் 2ஆம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பாக முருகப் பெருமானுக்கு பூஜை செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்க வேண்டும்.
* விரதத்தின் 7 நாட்களுக்கும் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும்.
* விரதத்தின் முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து முருகனுக்கு பூஜை செய்து
பெரியவர்களிடம் ஆசி வாங்கி விரதம் தொடங்க வேண்டும்.
* முருகப்பெருமானுக்கு நெய் வேத்தியமாக காய்ச்சிய பால், தேன், வெற்றிலை வைத்து வழிபட வேண்டும்.
* மஞ்சள் நூலை கைகளில் காப்பாக கட்டிகொள்ள வேண்டும்.
* விரதம் கடைபிடிப்பதை அனைவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. முடிந்தவரை பேச்சை குறைத்து 7 நாட்களுக்கும் உடலில் ஆற்றலை தக்க வைத்துக் கொள்வது நல்லது.
Read More : புதிய டிவி சேனலை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!! என்ன பெயர் தெரியுமா..?