முகத்தில் மேக்கப் போடவே வேண்டாம்.. பளீச் முகத்திற்கு இந்த ஒரு பொருள் பயன்படுத்துங்க போதும்.?!
பொதுவாக குங்குமப்பூ பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பல குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த குங்கும பூவை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் இயற்கையான பொலிவை ஏற்படுத்துகிறது.
'வைட்டமின் சி' அதிகம் உள்ள குங்குமப்பூ முகத்தில் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகள், பருக்கள், பிக்மென்டேஷன் போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் குங்குமப்பூ, சூரியனின் உள்ள புற ஊதா கதிர்களில் இருந்து முகத்தை பாதுகாக்கிறது. குங்குமப்பூவை எப்படி முகத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: குங்குமப்பூ - சிறிதளவு, தயிர் - 1ஸ்பூன், தேன் - சிறிதளவு
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர், தேன், மற்றும் குங்குமப்பூவை நன்கு கலந்து பேஸ்டாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இந்த பேஸ்டை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து பத்து நிமிடம் வரை காய விட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் பொலிவான தோற்றத்தை பெறலாம்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வர முகம் பொலிவான தோற்றத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல், பியூட்டி பார்லர்களில் செலவிடும் நேரம் குறையும்.