For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மின் இணைப்புடன் Aadhaar எண்ணை இணைப்பது எப்படி..? நீங்களே வீட்டிலிருந்து செய்யலாம்..!!

04:31 PM Feb 26, 2024 IST | 1newsnationuser6
மின் இணைப்புடன் aadhaar எண்ணை இணைப்பது எப்படி    நீங்களே வீட்டிலிருந்து செய்யலாம்
Advertisement

வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அனைத்திலும் இணைக்கப்படும் ஆதார் அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி..?

* முதலில் Tangedco என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில், முதலிலேயே Link your service connection with Aadhar என்று இருக்கும், அதற்குள் செல்ல வேண்டும்.

* பின் அதில் சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை படித்து பார்த்துக்கொள்ளவும்.

* அடுத்து Service Connection Number என்று இருக்கும் இடத்தில் உங்களது மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும்.

* பின் Enter கொடுத்தவுடன், உங்களது தொலைப்பேசி எண்ணை பதிவிட வேண்டும்.

* நீங்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதை பதிவுடவும்.

* (உங்களுடைய எண் Register செய்யப்படவில்லை என்றால், Tangedco என்ற வலைத்தளத்தின் முகப்பக்கத்திற்கு சென்று, அதில் Billing Service என்ற பகுதியை கிளிக் செய்து அதில் இருக்கும் Mobile Number Registration என்ற பகுதிக்குள் சென்று செய்யலாம்.)

* அடுத்ததாக Owner or Tenant என்று காட்டும் போது அதை நிரப்பி Enter செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய எண் பதிவு செய்யப்படும்.

* OTP உள்ளிட்ட பிறகு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.

* அடுத்தாக ஆதார் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அதனை சரியாக நிரப்பிய பின்னர், Declaration கேட்கப்படும்.

* அதற்கு Submit கொடுக்க வேண்டும். பின்னர் The details has been uploaded successfully என்று காட்டினால் உங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டதாக அர்த்தம்.

Read More : Registration | காலி மனை வாங்குவோர் கவனத்திற்கு..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! பத்திரப்பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

Advertisement