'PAN CARD' தொலைந்து விட்டது என கவலையா.? 2 நிமிடங்களில் பான் கார்ட் பெறுவது எப்படி.?
நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படும் பான் கார்ட் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. வங்கி கணக்கு துவங்குவது முதல் வருமான வரி கணக்கு செலுத்துவது வரை அனைத்திற்கும் பான் கார்ட் தேவைப்படுகிறது.
மேலும் வங்கிகளில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்வதற்கும் பான் கார்ட் அவசியமாகிறது.இத்தனை சிறப்பு வாய்ந்த பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது.? அதனை மீண்டும் பெறுவது எப்படி.? என்பது போன்ற சந்தேகங்கள் நம் அனைவருக்கும் இருக்கும். தொலைந்து போன பான் கார்ட் பெறுவது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
பான் கார்டு ரீ ப்ரிண்ட் செய்து ஆவணமாக கிடைக்க வேண்டும் என்றால் இந்த சேவையை நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனம் வழங்குகிறது. மீண்டும் அச்சிடப்பட்ட பான் கார்டு பெறுவதற்கு இந்த இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்தால் பான் கார்டு நமது நிரந்தர முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மின்னணு பான் கார்டு வேண்டும் என்றால் என்எஸ்டிஎல் இணையதளம் சென்று நம்முடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் அதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி வரும். அந்த நம்பரை உள்ளீடு செய்து பான் கார்டின் 'pdf' பதிவைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை ஓபன் செய்வதற்கு பிறந்த தேதியை பற்றிய விவரங்களை போதுமானது.