For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரயிலில் இலவச உணவு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

One of the major decisions taken by Indian Railways is to provide free food to passengers. It's not new, but it's improved.
05:40 AM Oct 10, 2024 IST | Chella
ரயிலில் இலவச உணவு     யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா    கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
Advertisement

இந்திய ரயில்வே எடுத்துள்ள முக்கிய முடிவுகளில் ஒன்று பயணிகளுக்கு இலவச உணவு வழங்குவது. இது புதிது அல்ல என்றாலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருவதால், அனைத்து பயணிகளுக்கு இலவச உணவு வழங்க முடியாது. இருப்பினும், இலவச உணவு வழங்குவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அது பொருந்தக்கூடிய சில பயணிகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

Advertisement

ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. அதுவும் எப்போதும் உணவு இலவசம் கிடையாது. சில சந்தர்ப்பங்களில் மட்டுமே. இந்தியன் ரயில்வேயை பொறுத்தவரை, எதாவது ஒரு காரணத்தால் தினமும் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. இருப்பினும், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்குத் தாமதம் ஆகும்போது எந்த கூடுதல் கட்டணமும் இன்றி இலவச உணவு வசதியை ரயில்வே வழங்கி வருகிறது.

இந்த ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக செல்லும் போது பயணிகளுக்கு இலவச உணவு கிடைக்கும். அதாவது, ரயில் சரியான நேரத்தில் வராமல், 2 மணி நேரம் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இலவச உணவு மற்றும் பானங்கள் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது. இந்த ரயில்களில் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பிரீமியம் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால், ஒருநேர உணவு மட்டும் அல்ல, பயணிகளுக்கு காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு போன்றவை கிடைக்கும். இவற்றுக்கு ரயில்வே பயணிகள் பணம் செலுத்தத் தேவையில்லை. ரயில்வே பயணிகள் மற்ற உணவுப் பொருட்களை விரும்பினால் தங்கள் சொந்த செலவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி ஃபுட் ஆன் ட்ராக், இ-கேட்டரிங் ஆப் அல்லது www.catering.irctc.co.in இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்யலாம். சமீபத்தில், வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யும் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. +918750001323 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்புவதன் மூலம் உணவு விநியோக சேவைகளைப் பெறலாம். இந்த சேவை சில ரயில்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இதுமட்டுமின்றி, உணவு விநியோக சேவையான ஜூப் உடன் இணைந்து வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யும் சேவையையும் இந்தியன் ரயில்வே தொடங்கியுள்ளது. இரயில்வே பயணிகள் PNR எண்ணை Joop chatbot எண் +917042062070 க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் உணவை ஆர்டர் செய்யலாம்.

Read More : மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!

Tags :
Advertisement