ஒரு சில உணவை எந்த உணவோடு கலந்து சாப்பிடக்கூடாது தெரியுமா.! மருத்துவர்களின் எச்சரிக்கை.!?
நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரும் விரும்பி வருகிறோம். ஆனால் ஒரு சில உணவுகளை மற்றொரு உணவுகளுடன் கலந்து சாப்பிடும் போது அது நம் உடலில் எதிர்வினையை ஏற்படுத்தி நோய் பாதிப்பிற்குள்ளாகிறோம். எனவே மருத்துவர்களும் ஒரு சில உணவுகளை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடக்கூடாது என்று எச்சரித்து வருகின்றனர். அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து பார்க்கலாம்.
1. தேனையும், நெய்யையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. தேன் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்பாக தான் நெய் சாப்பிட வேண்டும். இவ்வாறு இரண்டையும் கலந்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
2. வாழைப்பழத்தை பால் பொருட்களான தயிர் மற்றும் மோர் போன்றவற்றுடன் கலந்து சாப்பிடக்கூடாது. இவ்வாறு சாப்பிடுவது வயிற்றில் செரிமான கோளாறு ஏற்படுத்தும்.
3. சாப்பிடுவதற்கு 1மணி நேரத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இது வயிற்றுப் பசியை போக்குவதோடு, அஜீரணக் கோளாறையும் ஏற்படுத்தும்.
4. சிலர் காய்கறிகளை சமைக்கும்போது வெண்ணெய் சேர்த்து சமைத்து வருகின்றனர். அவ்வாறு சமைக்கும்போது காய்கறிகளின் ஊட்டச்சத்து அழிந்து விடும்.
5. மீன், கருவாடு போன்ற கடல் உணவுகளை சாப்பிட்ட பின் பால், தயிர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
6. தயிரையும், ரசத்தையும் கலந்து சாப்பிடக்கூடாது. இது நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலங்களை அதிகப்படுத்துதல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.
7. தோல் நோய் இருப்பவர்கள் கத்தரிக்காய், கருவாடு, கருணைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து உண்பதால் நோயின் பாதிப்பை தீவிரப்படுத்தும்.
இவ்வாறு ஒரு சில உணவுகளை மற்ற உணவுகளுடன் கண்டிப்பாக கலந்து சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிடும் போது உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.