உங்களிடம் இந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை பாருங்க..!!
பொதுமக்களில் சிலர் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கைகளில் வைத்துக் கொண்டு எப்படி மாற்றுவது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்காக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, அருகில் இருக்கும் வங்கிகளில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். நோட்டின் சிதைவு அளவைப் பொறுத்து வங்கிக் கட்டணம் மாறுபடும்.
அதே போல், ஒரு நபர் ஆண்டிற்கு 20 முறை மட்டுமே பணத்தை மாற்றிக் கொள்ள முடியுமாம். அதுவும் ஒரே நேரத்தில் ரூ.5,000 வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நோட்டுகளை கட்டணமின்றி மாற்றிக் கொள்ளலாம். அதுவே, ரூ.50 முதல் ரூ.500 வரையிலான நோட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
வங்கிகளில் செல்லாத பணத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் :
அருகில் அமைந்துள்ள வங்கி கிளைக்கு நேரில் செல்ல வேண்டும். வங்கியில் வழங்கப்படும் படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். கிழிந்த அல்லது சிதைந்த நோட்டுகளை வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் நோட்டுகளை சரிபார்த்த பிறகு, புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
வங்கிக்கு செல்லும் போது ஆதார், பான்கார்டு என ஏதாவது ஒரு அடையாளச் சான்று அவசியம். அதே போல் வங்கிக் கணக்கு புத்தகத்தை எடுத்து செல்ல வேண்டும். நோட்டுகளை சரிபார்ப்பதற்கு சிறிது காலதாமதம் ஆகலாம். இதனால் காத்திருந்து கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Read More : நாளை புரட்டாசி பௌர்ணமி..!! வீட்டில் வழிபடும் முறை..!! பெண்களே மறக்காம இதை பண்ணுங்க..!!