For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’2 சீரியலில் நடித்துவிட்டு 2 கோடிக்கு கார் வாங்குவது எப்படி’..? ’எல்லாமே அட்ஜஸ்ட்மெண்ட் தான்’..!!

As far as the world of cinema is concerned, actors, whoever they are, don't necessarily look for women. Women will come and fall.
01:38 PM Sep 26, 2024 IST | Chella
’2 சீரியலில் நடித்துவிட்டு 2 கோடிக்கு கார் வாங்குவது எப்படி’    ’எல்லாமே அட்ஜஸ்ட்மெண்ட் தான்’
Advertisement

நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நடிகர் நிவின் பாலின் மீது 37 நடிகைகளை குற்றம் சாட்டியிருக்கிறார்களே? அவர் ஏதாவது பெண்ணை அழைத்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கிறாரா? என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "37 என்ன 107 என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், சினிமா மோசமானது. சில பெண்கள் தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற நினைப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஜெமினி கணேசனும் அந்த காலத்தில் பல நடிகைகளோடு தொடர்பில் இருந்தவர்தான். காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் எனக்கு ஆரம்ப கட்டத்தில் நிறைய பழக்கம் இருந்தது. அவ்வை சண்முகி படத்தின்போது என்னை அழைத்து பேசிக் கொண்டிருப்பார். ஒருமுறை எப்படி உங்களுக்கு காதல் மன்னன் என்ற பெயர் வந்தது என்று கேட்டேன். அதற்கு, அந்த காலத்தில் என் மீது கிரஷ் பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள். என்றெல்லாம் நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார்”.

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் புகார் கொடுத்திருந்தாங்க. அந்த பெண் கொடுத்த தேதியில், அவர் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரத்தை காட்டிவிட்டார். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம் தான். அவர் மீது 37 பெண்கள் புகார் கொடுத்திருக்காங்க. இவராக சென்று யாரையாவது கையைப்பிடித்து இழுத்தாரா? இவர்களாகவே தான் சென்றார்கள்.

சினிமா உலகை பொறுத்தவரை, நடிகர்கள் யாராக இருந்தாலும், அவர்களாக பெண்களை தேடி போக வேண்டிய அவசியமில்லை. பெண்களே வந்து விழுவார்கள். இது இந்த மண்ணோட இயல்பு. சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் இது நடக்கிறது. 2 சீரியலில் நடிச்சிட்டு, உடனே 2 கோடிக்கு கார் வாங்குவது எப்படி? எல்லாமே அட்ஜெஸ்ட்மெண்ட் தான்" என்றார்.

Read More : பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்..!! விண்ணப்பிப்பது எப்படி..? தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement