For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆன்லைனில் கேஸ் எப்படி புக் செய்வது?… பெயர் மாற்றம் எப்படி செய்வது?… ரொம்ப சிம்பிள்!… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க!

09:30 AM Dec 13, 2023 IST | 1newsnationuser3
ஆன்லைனில் கேஸ் எப்படி புக் செய்வது … பெயர் மாற்றம் எப்படி செய்வது … ரொம்ப சிம்பிள் … உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க
Advertisement

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்து பெற்றுக்கொள்வதற்கு இப்போது நிறைய ஸ்மார்ட் வழிகள் வந்துவிட்டன.. அந்தவகையில், போன் கால், SMS, ஆன்லைன், மொபைல் ஆப், வாட்ஸ் அப் இப்படி பல வசதிகள் உள்ளன.. பல வழிகள் எளிமையான முறையில் வந்துவிட்டாலும்கூட, சிலருக்கு எப்படி கேஸ் புக்கிங் செய்வது என்று தெரியவில்லை. Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். நீங்கள் HP கேஸ் வாடிக்கையாளராக இருந்தால், 92222 01122 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.

Advertisement

நீங்கள் Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளராக இருந்தால், 1800224344 என்ற எண்ணிற்கு "Hi" என மெசேஜ் அணுப்பினாலே உங்களுடைய சிலிண்டர் புக் செய்யப்படும். முக்கியமாக உங்கள் மொபைல் நம்பர் சரியாக பதிவு செய்திருப்பது அவசியம். அதுமட்டுமின்றி Paytm, PhonePay, Google pay மூலமாகவும் சிலிண்டரையும் முன்பதிவு செய்யலாம். கிரெடிட் கார்டு மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்புவோர் சலுகைகளை சரிபார்த்து அந்தந்த தளத்தின் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கேஸ் யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர் ஆணாக இருந்தால், அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் தேவை. அவர் திருமணமான பெண்ணாக இருந்தால், அவரது மகளிடம், அவரது கணவரிடம் என 2 பேரிடமிருந்தும், உங்கள் பெயருக்கு மாற்ற, ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் தனித்தனியாக பெற்றுக் கொள்ள வேண்டும். - இந்த சான்றிதழை, உங்களது ரேஷன் கார்டின் நகலுடன் சேர்த்து, உங்கள் கேஸ் இணைப்பு உள்ள அலுவலகத்தில் தரவேண்டும்.

விநியோகஸ்தர் அலுவலகத்தில் இருப்பவர், உங்களுடைய பெயர் அல்லது உங்களின் குடும்ப உறுப்பினர் பெயரில் வேறு ஏதாவது கேஸ் இணைப்பு உள்ளதா என்பதை நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றால் கேஸ் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றித்தருவார்கள். ஆனால், புதிதாக பெயர் மாற்றப்படும்வரை, கேஸ் விநியோகம் உங்களுக்கு செய்யப்பட மாட்டாது. ஒருவேளை இணைப்பு யாருடைய பெயரில் வாங்குகிறீர்களோ, அவர் இறந்து விட்டால், அவரது இறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் வாரிசு சான்றிதழின் நகல் இரண்டையுமே கேஸ் இணைப்பு தரும் அலுவலகத்தில் கொண்டுபோய் தர வேண்டும்.

Tags :
Advertisement