ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை பண்ணுவது எப்படி..? ஈசியான வழிமுறைகள் இதோ..!!
டிரைவிங் லைசென்ஸ் தொலைத்தவர்கள் அதை திரும்ப பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே அதை ஆன்லைனில் எளிதில் பெற முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்டோர் வாகனங்கள் ஒட்டுவதற்கு அனுமதி அளித்திருக்கும் இந்திய சட்டம், அவர்கள் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. பல்வேறு தேவைகளுக்கான அடையாள அட்டையாகவும் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான ஆவணத்தை தொலைத்துவிட்டு எப்படி பெறுவது என்று தெரியாமல் பலர் தவிக்கின்றனர். அதை வீட்டில் இருந்தே பெற முடியும்.
-- ஆன்லைனில் ஓட்டுநர் உரிம நகலை பெறுவதற்கு படிவம்-2 (Form-2) LLD, ஓட்டுநர் உரிமத்தின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், வயதுச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க, முதலில் https://parivahan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
-- அங்கு, 'ONLINE SERVICES' என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பின்னர் 'DRIVING LICENCE RELATED SERVICES' என்பதைத் கிளிக் செய்யவும்.
-- அடுத்து 'தமிழ்நாடு' மாநிலத்தைத் தேர்வு செய்யவும். பின்னர், புதிதாக திறக்கும் பக்கத்தில் 'DRIVING LICENCE' என்ற பக்கத்திற்குச் சென்று, 'SERVICES ON DL (புதுப்பித்தல்/ நகல்/ AEDL/ IDB/மற்றவை)' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
-- அதில் CONTINUE என்ற பட்டனை அழுத்தி, உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணையும் உங்கள் பிறந்தநாளையும் பதிவிட வேண்டும். தொடர்ச்சியாக, பெறப்பட்ட டி.எல் விவரங்களில் இருந்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தைத் தேர்ந்தெடுத்து Continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
-- பிறகு, உங்களின் மாநிலத்தின் பெயர் மற்றும் ஆர்.டி.ஓவை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தின் விவரங்களை உறுதி செய்துவிட்டு, பின்னர் 'ISSUE OF DUPLICATE DL' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஏன் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை அங்கு நீங்கள் சொல்ல வேண்டும்.
-- இதையடுத்து, நீங்கள் முன்பு பூர்த்தி செய்து வைத்து இருந்த விண்ணப்பப் படிவத்திற்கான பணத்தை செலுத்தி, அந்த விண்ணப்பத்தையும், ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.