இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் எவ்வளவு? இத்தனை லட்சம் கோடியா? ஷாக் ஆகாம படிங்க..
இந்தியாவை ஆங்கிலேயர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். முதன்முதலில் வியாபார நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், ஒருகட்டத்தில் பல பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினர். இதனால் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு புதிய சட்டங்களையும், விதிகளையும் அவர்கள் கொண்டு வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்தனர். ஆனால் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்த பணம் எவ்வளவு தெரியுமா?
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து சுமார் 45 டிரில்லியன் டாலர்களை கொள்ளையடித்தனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 1757 மற்றும் 1947 க்கு இடையில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து சுமார் 80 ஆயிரம் டிரில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்றாசிரியர் உத்சா பட்நாயக் இதுகுறித்து பேசிய போது “ 1765 மற்றும் 1938 க்கு இடையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து சுமார் 45 டிரில்லியன் டாலர்களை கொள்ளையடித்தனர். இந்த தொகை இன்று பிரிட்டனின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 15 மடங்கு அதிகம். இந்தியாவின் காலனித்துவத்தால் பிரிட்டனுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மை எதுவும் கிடைக்கவில்லை என்று பிரிட்டன் மக்கள் நம்புகிறார்கள், ஆனால் அது உண்மையில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை சுரண்டியதை திரும்ப முடியாமல் இந்தியா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த தொகையில் கால் பங்காவது இந்தியாவிடம் இருந்தால் இந்த நேரத்திற்கு இந்தியா பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும்” என்று கூறினார்.
பிளாசி போர், திருப்புமுனை: ஆங்கிலேயர்கள் 1757 முதல் 1947 வரை 190 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர். பிளாசி போரில் வெற்றி பெற்ற பிறகு, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவினர். இதற்குப் பிறகு, 1858 இல், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி விக்டோரியா மகாராணிக்கு வழிவகுத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை பொருளாதாரச் சுரண்டலுக்கும், அரசியல் ஒடுக்குமுறைக்கும், கலாச்சார ஏகாதிபத்தியத்துக்கும் உட்படுத்தினார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் வெடிக்க தொடங்கியது. ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறையால சுதந்திர போராட்டத்தில் எண்ணற்ற வீரர்கள் தங்கள் உயிரை நீத்தனர். ஒருவழியாக 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.