முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்க fridge-ல வெப்பநிலை எவ்வளவு இருக்கு?… இதற்கு மேல் இருந்தா ஆபத்து!… ஆய்வில் அதிர்ச்சி!

04:33 PM Nov 22, 2023 IST | 1newsnationuser3
Advertisement

அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் குளிசாதன பெட்டி (fridge). இது இல்லாமல், ஒரு நாளின் வேலை ஓடுவது கடினம். சாப்பாடு, பால், காய்கறிகள் போன்ற உணவு பொருட்கள் எளிதில் கெட்டுப்போகாமல் இருக்க இது உதவுகிறது. ஆனால், இந்த குளிர்சாதன பெட்டி, நமது சுகாதாரத்துக்கும் சரி, சுற்றுச் சூழலுக்கும் சரி ஆபத்தானதாக இருக்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் 20 சதவிகித வீடுகளில் இந்த குளிர்சாதன பெட்டி, தவறான வெப்பநிலையில், பயன்படுத்தப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கிறது.

Advertisement

உணவை இயல்புநிலை அமைப்பில் சேமித்து வைப்பது பொதுவானது தான் என்றாலும், பலர் அதிக தீங்கு விளைவிக்கும் வெப்பநிலையிலேயே உணவை வைத்திருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள RMIT பல்கலைக்கழக்கத்தில், பேராசிரியர் பாவனா மித்தாதலைமையில், இந்த குளிர்சாதனபெட்டி பயன்பாடு குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஃப்ரிட்ஜுகளில் வைக்கப்படும் உணவுகளின் வெப்பநிலை 35.6°Fல் இருந்து 44.6°F வரை இருப்பது சரியானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் தோராயமாக 17 சதவிகித மக்கள், இதற்கு கூடுதலாகவோ குறைவாகவோ வெப்பநிலையில் உணவு பொருளை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கின்றனர்.

பேராசிரியர் பாவனா கூறுவதாவது, “பெரும்பாலான மக்கள், உணவு பொருளின் பயன்படுத்தப்பட வேண்டிய தேதியை மாறி படித்ததாக கூறுகின்றனர். அதாவது, உண்மையில் பிரச்னை அவர்களது ஃப்ரிட்ஜில் என்பதை ஏற்க மறுக்கும் மனப்பான்மை இது. ஆஸ்திரேலியாவில் உணவுபொருள், குறிப்பாக மாமிசம் வீணாக்கல், 140,300 டன்னாக இருக்கிறது. வீடுகளில் வீணாக்கப்படும் உணவின் அளவை கட்டுப்படுத்த இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 56 வீடுகளில் குளிர்சாதன பெட்டி மற்றும் ஃப்ரீசர்களின் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.

அதில், ஒரே குளிர்சாதன பெட்டிக்குள் மாறுபட்ட வெப்பநிலைகள் கண்டறியப்பட்டது. குறிப்பாக குழந்தைகள் இருந்த வீடுகளில் இந்த டெம்பரேச்சர் வெகுவாக மாறுபட்டது. குழந்தைகள் அடிக்கடி ஃப்ரிட்ஜை திறந்து மூடுவது இதற்கு காரணமாக இருந்தது. “உணவு மிகவும் சூடாக இருக்கும் போது, ​​பாக்டீரியா மிக வேகமாக பெருகும். உணவு மிகவும் குளிராக இருக்கும்போது, ​​அது உறைந்துவிடும் அல்லது உறைவிப்பான் எரிக்கப்படும். இரண்டு நிலைகளும் உணவு கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும்” என்கிறார் பேராசிரியர் பாவனா.

Tags :
FridgeTemperatureஆபத்துஆய்வில் அதிர்ச்சிவெப்பநிலை எவ்வளவு இருக்கு?
Advertisement
Next Article