நீங்கள் எத்தனை ஆண்டுகளாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்க..? ஆய்வு பண்ணிட்டீங்களா..? ஆபத்து..!! உடனே கால் பண்ணுங்க..!!
இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களாக இந்தியன் ஆயிலின் இண்டேன், பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ், இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் ஹெச்.பி. கேஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் டிஸ்ட்ரீபியூட்டர்கள் உதவியுடன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இதற்கிடையே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கியாஸ் அடுப்பு பயன்படுத்தும் போது அஜாக்கிரதையாக இருந்தால், விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. ஆனால், பலரும் அலட்சியமாகத் தான் இருக்கிறார்கள். கியாஸ் சிலிண்டர்களை பொறுத்தவரை சில விஷயங்களில் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இல்லையென்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அதேபோல், கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்கள் நிச்சயமாக ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, கேஸ் இணைப்பு பெற்ற பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டில் ஆய்வு செய்வது கட்டாயமாகும். சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இலவசமாகவும், சில நிறுவனங்கள் கட்டணம் வசூலித்தும் ஆய்வு செய்து வருகின்றன. 5 ஆண்டுகள் ஆகியும் உங்கள் வீட்டில் இன்னும் கேஸ் இணைப்பு குறித்த ஆய்வு நடத்தப்படவில்லை என்றால், உங்கள் கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொள்ளுங்கள்.