ஆதார் கார்டில் உங்கள் பெயரை எத்தனை முறை மாற்ற முடியும்..? மொபைல் நம்பருக்கு என்ன விதி..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!
இந்திய நாட்டில் ஆதார் கார்டு என்பது முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முக்கிய விதிகளை கொடுத்துள்ளது. இந்த விதிகளின்படி, ஆதார் கார்டில் பெயர் மாற்றிவர்கள் இனிமேல் மாற்ற முடியாமல் கூட போகலாம். அதேபோல மொபைல் நம்பர் மாற்றுவதிலும் விதிகள் உள்ளது. இதை தெரிந்துகொண்டு இனிமேல் ஆதார் கார்டில் எதையும் செய்து கொள்ளுங்கள்.
ஆதார் கார்டில் உங்கள் பெயரை எத்தனை முறை மாற்ற முடியும் தெரியுமா..? இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி ஒருவர் வாழ்நாளில் 2 முறை மட்டுமே ஆதார் கார்டில் பெயர் மாற்ற முடியும். இதற்கு மேல் மாற்ற விண்ணப்பித்தால், நிராகரிக்கப்பட்டுவிடும். ஆகவே, பெயர் மாற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், திருமணத்துக்கு பிறகோ, விவாகரத்துக்கு பிறகோ மற்றும் தத்தெடுப்பின் போதோ பெயரை மாற்ற அனுமதி வழங்கப்படும்.
ஆகவே, ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்யும் போது ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து மாற்றுவது நல்லது. பெயரில் எழுத்து சேர்ப்பது மற்றும் எழுத்து நீக்குவது போன்ற பல விண்ணப்பங்கள் ஆதார் அலுவலகத்துக்கு வருகின்றன. இவர்கள் 2 முறைக்குள் சரியாக மாற்றி கொள்வதே நல்லது. இப்போது மொபைல் நம்பர் மாற்றம் பற்றி தெரிந்து கொள்வோம். ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்ற விரும்பினால், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி..? ஆதாரில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர மூலம் பேங்க், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை ஓடிபி வெரிபிகேஷன் செய்கின்றன. இதனால், ஆன்லைனில் மொபைல் நம்பரை மாற்ற முடியாது. நேரடியாக ஆதார் சென்டர்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆன்லைனில் கிடைக்கும் படிவத்தை டவுன்லோட் செய்யலாம். அல்லது ஆதார் சென்டரிலும் பெற்று கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து கொடுத்தால், உங்களது பயோமெட்ரிக் விவரங்கள் சரி பார்க்கப்படும். பிறகே உங்களது புது நம்பர் ஆதார் கார்டில் அப்டேட் செய்யப்படும். இந்த நம்பர் குறைந்தபட்சம் 3 நாட்களில் அப்டேட் செய்யப்பட்டுவிடும். எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
Read More : இனியாவது சாப்பாட்டிற்கு உரிய மரியாதை கொடுங்கள்..!! இந்த தவறுகளை செய்து சாபத்திற்கு ஆளாகாதீர்கள்..!!