முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உன் புருஷன் ஆர்மில இருக்கும்போது உனக்கு எப்படி குழந்தை பிறந்துச்சு’..? மருமகளின் நடத்தையில் சந்தேகம்..!! சத்தமே இல்லாமல் தீர்த்துக் கட்டிய பரபரப்பு சம்பவம்..!!

Since both daughters are childless, the mother-in-law is suspicious about how only her daughter-in-law, Devikala, has two children.
10:29 AM Jan 04, 2025 IST | Chella
Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், காளசமுத்திரம் ஊராட்சிக்குபட்டவர்கள் ராமன் - கோவிந்தம்மாள் தம்பதி. இவருக்கு சிராலன்(35) என்ற மகனும், ராஜேஸ்வரி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். ராஜேஸ்வரி அதே கிராமத்திலும் ராஜலட்சுமி வேலூரிலும் திருமணமாகி கணவர் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

இதில், மகன் சிராலனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், தேவிகலா (24) என்ற மனைவியும், ஹரினி (4) என்ற மகளும், ஹரிகரன் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சிராலனின் தந்தை ராமன் இறந்து விட்டதால், தாய் கோவிந்தம்மாள் மருமகள் தேவிகலாவுடன் வசித்து வந்துள்ளார். கோவிந்தம்மாளின் இரண்டு மகள்களுக்கும் குழந்தையில்லாததால், மருமகள் தேவிகலாவுக்கு மட்டும் எப்படி இரண்டு குழந்தைகள் பிறந்தது என மாமியாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால், தேவிகலாவின் கணவர் சிரலான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதனால், மாமியாருக்கு குழந்தை பிறந்ததில் சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்து சமரசமாக சென்றுள்ளதாக கூறப்படுகின்றன. இந்நிலையில், சம்பவத்தன்றும் இருதரப்பினரிடையே சண்டை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளன. அப்போது ஆத்திரமடைந்த மருமகள் தேவிகலா தனது நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.

இதில் கோவிந்தம்மாள் மயக்கமடைந்துள்ளார். பின்னர், மகள் ராஜேஸ்வரியை தொடர்பு கொண்டு மாமியார் கோவிந்தமாள் தரையில் தடுக்கி விழுந்து மயக்கமடைந்து விட்டதாக கூறியதால் மருமகள் தேவிகலா, மகள் ராஜேஸ்வரி ஆகியோர் கோவிந்தம்மாளை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கோவிந்தம்மாளின் இறப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் அளித்தனர். பின்னர், 20 நாட்கள் கழித்து கோவிந்தம்மாள் கழுத்து நெரித்து இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. மேலும், தனியார் மருத்துவமனை அளித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் தேவிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேவிகலா நடந்ததை கூறி கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனது நடத்தையில் சந்தேகபட்ட மாமியாரை கொலை செய்த மருமகள் சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 2-வது மனைவி சமைத்த உணவை முதல் மனைவிக்கு கொடுத்த கணவன்..!! வீட்டில் வெடித்த சண்டை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tags :
கொலை வழக்குதிருவண்ணாமலைமாமியார் - மருமகள்
Advertisement
Next Article