என் பொண்டாட்டியை பார்த்து எப்படி இப்படி சொல்லலாம்..?? கணவரின் செயலால் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் Etios Digital Services எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிகித் ஷெட்டி என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பெண் ஒருவரின் ஆடை தேர்வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணுக்கு சோஷியல் மீடியா மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறார். முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டி அச்சுறுத்தியுள்ளார்.
இதுபற்றி நிகித் ஷெட்டி அவரது கணவர் சபாஷ் அன்சாருக்கு வலைதளத்தில் மெசேஜ் செய்துள்ளார். அதில், "ஹே தவறான உறவுக்கு பிறந்தவனே. உன் மனைவியை நல்ல உடை அணிய சொல். இல்லாவிட்டால், அவள் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன்'' என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, அன்சார் தனது எக்ஸ் பக்கத்தில் நிகித் ஷெட்டியின் போட்டோவை பதிவிட்டு போலீசில் புகாரளித்திருந்தார்.
அந்த பதிவில், “இந்த நபர் எனது மனைவியின் ஆடை தேர்வு குறித்த விஷயத்தில் தலையிட்டு அவரது முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் கர்நாடகா டிஜிபி, கர்நாடகா முதல்வர், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டவர்களை டேக் செய்திருந்தார்.
அதோடு இன்னொரு பதிவில் சபாஷ் அன்சார், ”எனது மனைவி மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்த நபர், இடியோஸ் டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது” என கூறியிருந்தார். மேலும் நிகித் ஷெட்டியின் லிங்க்ட்இன் பக்கத்தின் ஸ்கிரின்ஷாட்டை அவர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து நிகித் ஷெட்டி மீது அவர் பணியாற்றும் நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.
அதாவது பெண்ணின் ஆடை தேர்வு விஷயத்தில் தலையிட்டு ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்த நிகித் ஷெட்டியை பணியில் இருந்து நீக்கியது. இதுபற்றியும் சபாஷ் அன்சரி, ''எனது மனைவி மீது ஆசீட் ஊற்றுவதாக கூறிய நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த நபர் மீது அவர் பணியாற்றிய நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
Read More : Viral Video | யாரு பெருசுன்னு அடிச்சு பார்க்கலாமா..? முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற பரபரப்பு வீடியோ..!!