சொந்தமா பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டுமா? விண்ணப்பம் முதல் செலவு வரை முழு விவரம் உள்ளே..
பெட்ரோல் பங்க் அமைக்க தேவைப்படும் முதலீடு, விதிகள் மற்றும் நிதி தேவைகள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
பெட்ரோல் பங்க் டீலர்ஷிப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
* முதலில், பெட்ரோல் பங்க் டீலர் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
* எந்த நிறுவனத்தின் பெட்ரோல் நிலையத்தை திறக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக இந்தியன் ஆயில், பிபிசிஎல், ஹெச்பி போன்ற பல நிறுவனங்களின் பெயர்கள் அதில் வழங்கப்பட்டிருக்கும்.
* இதை தொடர்ந்து பதிவு (register) செய்ய வேண்டும். அதற்கு முகப்பு பக்கத்தில் உள்ள 'Register Now' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* உங்கள் தனிப்பட்ட விவரங்களை (பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் ஐடி போன்றவை) கொடுத்து register படிவத்தை நிரப்பவும். உங்கள் விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிப்பதன் மூலம், ஒரு கணக்கு உருவாக்கப்படுகிறது.
* அந்த கணக்கில் உள்நுழைந்து டாஷ்போர்டில் உள்ள 'Available Advertisements' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* எந்த மாநிலத்தில், எந்த நிறுவனத்திற்கு நீங்கள் பெட்ரோல் பங்க்கை திறக்க முயற்சிக்கிறீர்கள் என்று தேர்ந்தெடுத்த பிறகு 'Apply Now' பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
* அதன் பிறகு நீங்கள் வணிக வகையைத் தேர்வு செய்ய வேண்டும். தனிநபருடன் வணிகம் செய்வதா? அல்லது கூட்டு முயற்சியா? என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்
* அதன் பிறகு உங்களின் கல்வித் தகுதி, நிதி நிலை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். புகைப்படம் மற்றும் கையொப்பத்தையும் பதிவேற்றவும். இதை சமர்ப்பித்த பிறகு, நீங்கள் ரூ.10,000 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டண நுழைவாயிலுக்குத் திருப்பி விடப்படுவீர்கள்.
என்னென்ன தகுதி வேண்டும்?
லைசென்ஸ் : இந்தியாவில் பெட்ரோல் பம்பைத் திறக்க, பெட்ரோல் நிறுவனத்திடம் இருந்து லைசென்ஸ் பெற வேண்டும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் பம்ப் செயல்பாடுகளுக்கு லைசென்ஸ் வழங்குகின்றன.
நிலப்பகுதிகள் : கிராமப்புறங்களில் ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க ஒரு யூனிட்டுக்கு 800 சதுர மீட்டர் இடம் தேவைப்படும், அதுவே 2 யூனிட் அமைக்க வேண்டுமானால் 1200 சதுர மீட்டர் நிலம் தேவைப்படலாம். நகர்ப்புறங்களில் ஒரு பெட்ரோல் பங்க் திறக்க 1 யூனிட்டுக்கு 500 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். ஆனால் 2 யூனிட் அமைப்பதற்கு 800 சதுர மீட்டர் நிலம் தேவைப்படலாம்.
நேஷனல் ஹைவேஸ் : தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்க் திறக்க 1 யூனிட்டுக்கு 1200 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். அதுவே 2 யூனிட் அமைத்தால் 2000 சதுர மீட்டர் நிலம் தேவைப்படலாம்.
தேவைப்படும் முதலீடு :
* நிலம் இருக்கும் இடம் மற்றும் அளவைப் பொறுத்துரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும்.
* பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பெட்ரோல் பம்பின் அளவை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் செலவாகும்
* எரி பொருள் விநியோக யூனிட், சேமிப்புத் தொட்டிகள் மற்றும் பெட்ரோல் பம்பை இயக்குவதற்கு தேவையான பிற உபகரணங்களின் விலை ரூ. 20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருக்கும்.
* அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறுவதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகலாம்.
Read more ; பால் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும்..! பெண்களுக்கே அதிக பாதிப்பு!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!