இல்லத்தரசிகளே அதிர்ச்சி!. சிலிண்டர் விலை உயர்ந்தது!. எவ்வளவு தெரியுமா?
Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.61.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.
அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனையானது. இந்தநிலையில், சென்னையில் நேற்றுவரை ரூ.1,903 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் வர்த்தக சிலிண்டர் விலை தற்போது ரூ.61.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றுமுதல் ரூ.1,964.50க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ரூ.818.50 ஆக உள்ளது. கடந்த ஜூலை 1ல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: வங்க கடல் பகுதியில் இந்த வார இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…! வானிலை மையம் எச்சரிக்கை