அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்...! வீடு வாங்க இனி ரூ.25 லட்சம் முன்பணம்... தமிழக அரசு அரசாணை...!!
மாநில அரசு ஊழியர்களுக்கு சொந்த வீட்டு வாங்கும் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க கூடுதல் முன்பணம் பெற அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நெற்குன்றம் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக, அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய பணியாளர்களுக்கு, வீடு வாங்க வழங்கப்படும் முன்பணத்தில், கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய பணி அலுவலர்கள், சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது. வங்கியில் கடன் வாங்குவதற்கு பதிலாக, அரசிடம் முன்பணமாக இத்தொகையை அவர்கள் பெறலாம்.
சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அலுவலர்களின் மாத ஊதியத்தில் இத்தொகை தவணைகளாக பிடித்தம் செய்யப்படும். இந்த வகையில், அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணம், 50 லட்ச ரூபாயாகவும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கு, 75 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இந்த நிலையில் வீட்டுவசதி வாரியத்தின் நெற்குன்றம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், வீடு வாங்க அரசு ஊழியர்கள், அகில இந்திய பணி அலுவலர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அகில இந்திய சேவை அலுவலர்களுக்கு ரூ.20.00 லட்சத்தில் இருந்து ரூ.25.00 லட்சமாகவும், மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.10.00 லட்சத்திலிருந்து ரூ.15.00 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.