மகாராஷ்டிரா முதலமைச்சராக பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு..!! முடிவுக்கு வந்தது முதல்வர் சஸ்பென்ஸ்..
மும்பையில் நடைபெற்ற பாஜக மையக் குழுக் கூட்டத்தில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருடன் அவர் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்கிறார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. குறிப்பாக, யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. சிவசேனா ஆதரவாளர்கள் மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதுபோல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், தேவேந்திர பட்னாவிஸே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அங்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸை தேர்வு செய்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற பாஜக மையக் குழுக் கூட்டத்தில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருடன் அவர் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்கிறார்.
Read more ; தோனியிடம் பேசி 10 வருஷம் ஆச்சு.. காரணம் இது தான்.. ஹர்பஜன் சிங் ஆதங்கம்..!!