இந்த ஒரு பானத்தை மட்டும் குடிங்க.. இனி சளி, காய்ச்சலுக்கு மாத்திரையே சாப்பிட வேண்டாம்..
மார்கழி மாத குளிர் சுகமாக இருந்தாலும், சளி, மூக்கடைப்பு, இருமல், தொண்டை வலி, போன்ற பிரச்சனைகள் நம்மை பாடாய் படுத்தி விடும். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக உள்ளவர்கள், அதிகம் கஷ்டப்படுவது உண்டு. இதனால், பனிக்காலங்களில் முடிந்த வரை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பல மணி நேரத்தையோ, அதிக பணத்தையோ செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சுடு தண்ணீரும், தேனுமே நல்ல தேர்வு. இதனுடன் நீங்க எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம். சளி என்ற பிரச்னையே உங்களை எட்டிப்பார்க்க கூடாது என்றால், நீங்கள் இந்த பானத்தை குடிக்கலாம். இந்த பானத்தினால் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சீராகும். இதை தயாரிக்க, முதலில் ஒரு கப் தண்ணீரை சூடு செய்ய வேண்டும். ஆனால் கொதிக்கவைக்கக் கூடாது. இப்போது மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில், இரண்டு தேக்கரண்டி தேனை சேர்த்து கலக்கி விடுங்கள்.
இப்போது அதில், பாதி எலுமிச்சைப் பழத்தை பிழிந்துவிடுங்கள். அவ்வளவு தான். இப்போது இந்த பானத்தை மிதமான சூட்டிலேயே குடித்தால் நல்ல பலன் தரும். இந்த பானத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்கவும் இந்த பானம் உதவி செய்யும். நீங்கள் வழக்கமாக டீ, காபி குடிப்பதற்கு பதில் இந்த பானத்தை குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, பருக்கள் வருவதை குறைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
Read more: மட்டன் பிரியரா நீங்கள்?? மட்டனின் இந்த பகுதியை சாப்பிட்டு, உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்..