சளி, இருமல் பாடாய் படுத்துகிறதா?? இனி ஆரோக்கியத்தை பாதிக்கும் கண்ட மாத்திரை வேண்டாம்.. வெற்றிலையை இப்படி சாப்பிடுங்கள்..
குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. இதனால் நீங்கள் முடிந்தவரை மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே சளியை குணப்படுத்த முயற்சி செய்வது நல்லது. அந்த வகையில், சளி, இருமல், ஜலதோசத்தை விரட்ட எளிமையான ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்..
இதற்க்கு முதலில் நீங்கள், ஒரு வெற்றிலையின் காம்பை உடைத்து, நன்கு சுத்தம் செய்து விடுங்கள். இப்போது அதன் மேல் இருக்கும் நீரை துடைத்து விட்டு, அதில் சிறிது மிளகுத்தூள், சிறிது சோம்பு, சுக்கு அல்லது இஞ்சி தூளை தூவி, சிறிது தேன் விட்டு நன்கு கலக்கி விடுங்கள். இப்போது அந்த வெற்றிலையை நன்கு மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும். வெற்றிலையை இப்படி மென்று சாப்பிடுவதால், சளி, இருமல், ஜலதோஷம் நீங்கும். இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஆனால் இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கம்மியான அளவில் கொடுக்க வேண்டும்.
Read more: ராகி நல்லது தான்.. ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது!!!