குளிர் காலத்தில் அடிக்கடி சளி இருமல் தொல்லையா.? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் தெரியுமா.?
குளிர்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சாதாரணமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் கிருமிகள் உடலை தாக்கும். இந்த நோய்க்கிருமிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி விரட்டலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் ஒரு சில நோய்கள் உடலில் ஏற்படாமல் தவிர்க்கலாம். அடிக்கடி துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணாமல் வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை உண்டு வர வேண்டும்.
மேலும் சளி மற்றும் இருமல் இருக்கும்போது குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது மேலும் ஆட்டுக்கால் சூப், காய்கறி சூப் போன்ற மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட சூப் வகைகளை குடித்து வந்தால் சளி, இருமல் போன்ற நோய் தொல்லைகளில் இருந்து சீக்கிரம் குணமடையலாம்.
மேலும் தேனில் சுக்கு, மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது இருமலை உடனடியாக குணப்படுத்தும். வெற்றிலையில் கற்பூரத்தை சேர்த்து சிறிது சூடு படுத்தி எண்ணெயாக தயாரித்து குழந்தைகளின் நெஞ்சில் தடவி விடலாம். இவ்வாறு ஒரு சில செயல்முறைகளின் மூலம் நோய் தாக்குதலில் இருந்து எளிதில் விடுபடலாம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.