பள்ளிகளுக்கு விடுமுறை!... வெளுத்துவாங்கும் கனமழை!... ஆட்சியர்கள் அறிவிப்பு!
கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கன்னியகுமாரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக அந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த பருவ தேர்வு மற்றொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதனிடையே சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.