For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வரும் 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாணவர்கள் செம குஷி..!!

A local holiday has been declared for Cuddalore district on January 13th.
01:27 PM Jan 03, 2025 IST | Chella
வரும் 13ஆம் தேதி பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை     மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாணவர்கள் செம குஷி
Advertisement

கடலூர் மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஆண்டுதோறும் மிக சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி தேரோட்டமும், 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 2ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறையும் சேர்ந்து வருவதால் கடலூர் மாவட்டத்திற்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Read More : தூங்கி எழுந்தவுடனே போன் பார்க்கும் பழக்கம் இருக்கா..? ஆபத்து இல்லையென மட்டும் நினைக்க வேண்டாம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tags :
Advertisement