மக்களே கவனம்...! வேகமாக பரவும் HMPV வைரஸ்... திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம்...!
நாடு முழுவதும் எச்.எம்.பி.வி வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரவேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண இலவச தரிசன கட்டணம் நாளை அதிகாலை முதல் வழங்கப்படும் நிலையில், நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நாடு முழுவதும் எச்.எம்.பி.வி வைரஸ் பரவி வரக்கூடிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் முக கவசம் அணிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரவேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் HMPV பாதிப்பு உறுயாகி உள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு,குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் முகக்கவசம் காட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.