இந்தியாவிற்குள் நுழைந்த HMPV வைரஸ்..!! மாஸ்க் கட்டாயம், கை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்..!! மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை..!!
சீனாவில் கடந்த சில நாட்களாகவே ஹெச்எம்பிவி தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த ஹெச்எம்பிவி தொற்றுக்கு பெங்களூருவில் 8 மாத குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு நாம் அச்சப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே இந்த வைரஸுக்கு தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கிவிட்டன.
HMPV வைரஸ் எப்படி பரவுகிறது..?
* HMPV தொற்று பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் சுவாச நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.
* வைரஸ் உள்ள இடங்கள் அல்லது பொருட்களைத் தொட்டுவிட்டு, அப்படியே வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடும்போது இந்த வைரஸ் நமது உடலில் நுழைகிறது.
* ஏற்கனவே HMPV வைரஸ் பாதிப்புள்ள நபருடன் நெருக்கமாக இருப்பதாலும் கூட இந்த வைரஸ் பாதிப்பு பரவுகிறது.
முகக்கவசம் கட்டாயம் போடுங்கள்..
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டது. இந்த வைரஸ் பல லட்ச உயிர்களை காவு வாங்கியது. இதையடுத்து, லாக்டவுன், தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வடு மறைவதற்குள் தற்போது HMPV வைரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். வெளியில் சென்று வந்தால் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு கை கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Read More : ”எல்லாம் பணத்திற்காக”..!! கிரிக்கெட் வீரர் சாஹல் விவாகரத்து..? ரூ.20 கோடி டிமாண்ட் வைக்கும் மனைவி தனஸ்ரீ..?