பூமிக்கு அடியில் பல நூறு அடிகள் நீண்ட மர்ம குகை கோயில்.! எங்கு உள்ளது.!?
பொதுவாக கோயில்கள் என்றாலே மக்கள் செல்வதற்கு ஏதுவாக பொதுவான ஒரு இடத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இப்படியெல்லாம் இல்லாமல் பூமிக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் குகைக்குள் இருக்கும் மர்ம கோவிலை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயிலைப் பற்றி விளக்கமாக பதிவில் பார்க்கலாம்?
கர்நாடகா மாநிலத்தில் மணிச்சூழல் என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ஜர்னி நரசிம்ம குகை கோயில். இந்த குகைக்கோயில் பூமிக்கு அடியில் தோண்டப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்றால் மார்பளவு தண்ணீரில் நடந்து சென்று தான் தரிசிக்க முடியும்.
கோடைகாலத்திலும் கூட இந்த குகை கோயிலில் மார்பளவு தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த குகை கோயிலில் தண்ணீர் ஊற்றாக எங்கிருந்து வருகிறது என்பதை குறித்து யாருக்கும் தெரியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. மேலும் இந்த தண்ணீரில் பல மூலிகைகளின் மருத்துவ குணம் கலந்துள்ளதால் இதில் நீந்தி செல்பவருக்கு எப்பேர்ப்பட்ட நோயாக இருந்தாலும் குணமடையும் என்று நம்பப்பட்டு வருகிறது.
குகையின் முடிவில் நரசிம்ம சிலையும், சிவலிங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. நரசிம்மர், வதம் செய்த அசுரன் மனம் வருந்தி நரசிம்மரிடம் வேண்டியதால் அவருக்கு தண்ணீராக மாறும் சக்தி கொடுத்து அவரின் காலடியிலேயே தண்ணீர் ஊற்றாக இருக்குமாறு வரம் தந்தார். இதனாலையே இக்கோயிலில் மார்பளவு தண்ணீர் எப்போதும் இருந்து வருகிறது என்பது இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு வருகிறது. மேலும் எந்தவித நவீன பொருட்களும் இல்லாத காலத்தில் இவ்வளவு பெரிய குகைக்கோயில் எப்படி கட்டப்பட்டது என்பது குறித்து பலருக்கும் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது.