வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ஒப்பந்தமான முதல் இந்திய வீராங்கனை!
Smriti Mandhana: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் வேறுவேறு பெயர்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில், பிக் பாஷ் லீக் (BBL) சீசன் என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு 13வது பிக் பாஷ் லீக் (BBL) சீசன் கடந்த ஜனவரியில் நிறைவுற்றது. இதில் பிரிஸ்பேன் ஹீட் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
இந்த பிக் பாஷ் லீக் தொடர், ஆண்களைப் போன்று பெண்களுக்காகவும் நடத்தப்படுகிறது. எப்படி, ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாடுவதைப் போன்று, நம்நாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் அந்த நாட்டு அணிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் ஸ்மிருதி மந்தனா அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த வகையில், பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரின் 10வது சீசன் வரும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்துகொள்ள உள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆட இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த அணி நிர்வாகம் அவரை வரவேற்றுள்ளது. ஸ்மிருதி மந்தனா ஏற்கெனவே பெண்கள் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்காக ஆடி உள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மகளிர் ஐபிஎல்லில் அவரது தலைமையிலான அணி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: ஜிஎஸ்டி வருமானம் தொடர்பான பெரிய அப்டேட்!. இந்த விதி செப்டம்பர் 1 முதல் அமல்!.