For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இது மட்டும் நடந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயரும்..!! பெண்களுக்கு செம குட் நியூஸ்..!!

The DMK government has been implementing a monthly provision of Rs.
09:45 AM Sep 28, 2024 IST | Chella
இது மட்டும் நடந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ 2 500 ஆக உயரும்     பெண்களுக்கு செம குட் நியூஸ்
Advertisement

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த ஓராண்டாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஆனது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. தற்போது புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில், விராலிமலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினார். இது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும் பட்சத்தில் திமுகவும் உரிமைத் தொகையை உயர்த்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ.12,000 உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும். பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read More : உங்கள் கடை, நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா..? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement