முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிகிரி இல்லாமலேயே லட்சத்தில் சம்பளம் கிடைக்கும் வேலைகள்..!! என்னென்ன தெரியுமா?

High Paying Jobs in India Without Degree
10:23 AM Nov 22, 2024 IST | Mari Thangam
Advertisement

அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூரிப் பட்டம் தேவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூர் பட்டம் தேவையில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம் உண்மை தான்.. டிகிரி இல்லாமல் இந்தியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கமர்ஷியல் பைலட் : இந்தியாவில் கமர்ஷியல் பைலட் எனப்படும் விமானிகளுக்கு நல்ல ஊதியம் தரப்படுகிறது. கமர்ஷியல் பைலட் ஆவதற்கு பட்டம் தேவையில்லை. கமர்ஷியல் பைலட் குறித்த டிப்ளமோ படிப்பு முடிந்திருந்தாலே போதும் கை நிறைய சம்பளம் பெறலாம். ஆனால், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் அமெரிக்காவின் FAA ஆகியவற்றில் கமர்ஷியல் பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வெப் டெவலப்பர்/வெப் டிசைனர் : கோடிங் மற்றும் டிசைனிங்கில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் போதும் வெப் டெவலப்பர் ஆகலாம். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு வெப்சைட் டெவலப்மெண்ட் மற்றும் வெப் டிசைனிங்கில் சான்றிதழ் படிப்பை படிக்கலாம். வெப் டெவலர் துறையில் எண்ட்ரி லெவல் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை சம்பளத்தை வழங்கப்படுகிறது, அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் மேலும் அதிகரிக்கும்.

மேக்கப் ஆர்டிஸ்ட் : மேக்கப் ஆர்டிஸ்ட்டுகளுக்கு பெரும்பாலும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் நல்ல டிமாண்ட் உள்ளது. இவற்றில் நல்ல வருமானமும் கிடைக்கிறது. மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவதற்கு முறையான கல்வி தகுதி எதுவும் இல்லை. எளிய வகுப்புகள் மட்டுமே. அவற்றை கற்றுக்கொண்டாலே நல்ல வகையில் சம்பாரிக்க முடியும்.

விமானப் பணிப்பெண்கள் : ஏர் ஹோஸ்டஸஸ் எனப்படும் விமானப் பணிப்பெண்கள் விமானத்தில் பயணிகளுக்கான சேவைகளை வழங்குகிறார்கள். இந்த வேலைக்கு அது தொடர்பான படிப்பு இருக்கிறது என்றாலும், அவை டிகிரிக்கு ஒப்பான படிப்பு இல்லை. எனினும், வாடிக்கையாளர் சேவை அனுபவம், பல மொழிகளில் தேர்ச்சி போன்றவையே இந்த வேலைக்கு பிரதானம். அவை இருந்தால் நல்ல சம்பளம் பெறலாம்.

ஹோட்டல் செஃப் : சமையல் படிப்பு இது. எனினும் டிகிரி கிடையாது. சமையல் குறித்த ஆர்வமும், கூடவே முறையான பயிற்சி, அழுத்தத்திலும் வேலை செய்யும் திறன், டீம் ஒர்க் செய்யும் திறன் மற்றும் ஐந்து ஆண்டு அனுபவம் இருந்தால் போதும் டாப் ஹோட்டல்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.

ரியல் எஸ்டேட் முகவர் : இந்தியாவில் ஒரு வெற்றிகரமான ரியல் எஸ்டேட் முகவராக மாறுவதற்கு கல்லூரி பட்டப்படிப்பு தேவையில்லை. நெட்வொர்க்கிங் மற்றும் வணிக புத்திசாலித்தனம் இருந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் சான்றளிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் பயிற்சி, பயிற்சி உரிமம் பெற வேண்டும். கமிஷன்கள் மற்றும் வெற்றிகரமான பரிவர்த்தனைகள் மூலம் அதிக வருவாய் ஈட்டமுடியும். ஒரு ரியல் எஸ்டேட் முகவர் ஆரம்ப நிலையில்  சுமார் ரூ.4.25 லட்சம் சம்பாதிக்க எதிர்பார்க்கலாம்.

எத்திக்கல் ஹேக்கர் : இணையத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தெரிந்துகொண்டு, அதனை நிவர்த்தி செய்பவர்களே எத்திக்கல் ஹேக்கர்கள். இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் தகவல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கென பிரத்யேக படிப்பு இல்லை. கம்ப்யூட்டர் குறித்த அறிவும், தொழில்நுட்பம் குறித்த அறிவும் இருந்தால் போதும். இந்த அறிவை கொண்டு நல்ல ஊதியத்தை பெறலாம்.

Read more ; உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க இதுதான் முக்கிய காரணம்..!!

Tags :
DegreeindiajobsWithout Degree
Advertisement
Next Article