முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gen Z, Hidden Love புகழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி.. உடல் நலம் கவலைக்கிடம்..!! 26 வயசு தான் ஆகுது.. என்ன ஆச்சு..?

Hidden Love actress Zhao Lusi speaks about abuse and mental heath issues, says 'I think it is wrong
04:11 PM Jan 02, 2025 IST | Mari Thangam
Advertisement

ஹிடன் லவ், Gen Z படத்தில் நடித்ததற்காக பிரபலமாக அறியப்பட்ட சீன நடிகை ஜாவோ லூசி, சில நாட்களுக்கு முன்பு சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த செய்தி அரவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

26 வயதான நடிகை தனது குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தார். Zhao Lusi நடித்த Dating in the Kitchen, The Romance of Tiger and Rose, Who Rules the World போன்ற சி வகை நாடகங்கள் புகழ் பெற்றன. இருப்பினும் Hidden Love டிராமா மூலம் உலகளவில் பிரபலமானார்.

டிசம்பர் 18 அன்று, படப்பிடிப்பின் போது ஜாவோ லூசிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன், அவர் பலவீனமாகவும், நிலையற்றவராகவும் காணப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவப் பராமரிப்பில் இருப்பதாகவும், குணமடைவதில் கவனம் செலுத்துவதற்காக அனைத்து வேலைகளையும் நிறுத்திவைத்திருப்பதாக அவரது நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஏஜென்சி அவரது உடல்நிலை குறித்த குறிப்பிட்ட விவரங்களை வெளியிடுவதைத் தவிர்த்தது,

தனது அழகாலும், வசீகரத்தாலும் உலக ரசிகர்களை கவர்ந்த நடிகை Zhao Lusiயின் தற்போதைய நிலைக்கு காரணம் அவர் உடன் பணியாற்றிய நபர்தான் என கூறப்படுகிறது. அந்த நபர் நடிகையை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும், மிரட்டி பணிய வைத்ததால், தினமும் அடி வாங்கி கை, கால் முடங்கி தற்போது நடமாட முடியாமல் சக்கர நாற்காலி மூலம் அவரது வாழ்க்கை மாறியதாக தகவல்கள் கூறுகிறது.

Read more ; ”இப்போது வரை நான் கண்ணகியாகதான் வாழ்ந்து வருகிறேன்”..!! ”அவரைப் பற்றிப் பேசவே எனக்கு விரும்பவில்லை”..!! நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

Tags :
actress Zhao LusiChinese actress Zhao Lusimental heath issues
Advertisement
Next Article