இந்த விஷயம் தெரியுமா.? நெருப்பை வாய் வைத்து ஊதி அணைக்க கூடாது.? அது ஏன்னு தெரியுமா.?
உலகில் மனித இனத்தின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் முதன்மையானது நெருப்பு. நெருப்பை கண்டுபிடித்த பிறகு தான் மனித குலத்தின் வாழ்வியலில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு தான் மனிதன் உணவை சமைத்து சாப்பிடவும் ஆரம்பித்தான். உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் நெருப்பு இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் சாஸ்திரங்களிலும் பஞ்சபூதங்களில் ஒன்றாக நெருப்பு பார்க்கப்படுகிறது.
இந்து புராணங்களிலும் நெருப்பு அக்கினி தேவனாக வணங்கப்படுகிறது. பொதுவாகவே முன்னோர்கள் நெருப்பினை வாயினால் ஊதி பெருக்கவோ அல்லது அணைக்கவோ கூடாது என்று கூறுவார்கள். அப்படி கூறுவதற்கும் காரணங்கள் இருக்கிறது. சாஸ்திரங்களின்படி நெருப்பு அக்கினி தேவனாக வணங்கப்படுவதால் எச்சில் நிறைந்த வாயால் அதனை ஊதி அணைப்பது நெருப்பை அவமதிப்பது போல் ஆகும். இதன் காரணமாக நெருப்பை வாயால் ஊதி அணைக்க கூடாது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பு காரணங்களாலும் நெருப்பை வாய் வைத்து ஊதியணைப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் குனிந்து நெருப்பை ஊதி அணைக்கும் போது அவை ஆடையில் பட்டு பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் நெருப்பில் இருக்கும் வெப்பமும் புகையும் நம் சுவாசத்தின் வழியாக உள்ளே சென்றாள் உடலுக்கு பலவிதமான தீங்குகள் ஏற்படலாம். இதன் காரணமாகவும் நெருப்பை வாயால் ஊதி அணைப்பதை தடுத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.