For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வியர்க்குருவை ஒரே வாரத்தில் விரட்டியடிக்க… எளிய டிப்ஸ் இதோ..!

06:10 AM May 08, 2024 IST | Baskar
வியர்க்குருவை ஒரே வாரத்தில் விரட்டியடிக்க… எளிய டிப்ஸ் இதோ
Advertisement

ஒருபுறம் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் நம்மை அச்சுறுத்துகிறது. இதில் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது வியர்க்குரு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த வியர்க்குரு பாடாய்படுத்துகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே வெயில் வாட்டி வதைக்கிறது. கொஞ்சம் வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் மழையில் நனைந்தார்போன்று நம் உடல் மாறிவிடுகிறது. வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகிகொண்டே போவதால் நம் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் மிகப்பெரிய பிரச்னை வியர்க்குரு. இந்த வியர்க்குருவில் இருந்து எப்படி விடுபடலாம். அதை வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..!

வியர்க்குரு எதனால் தோன்றுகிறது:

நம் உடலில் வெப்பநிலையைப் பராமரிக்கக் கூடியது வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் வியர்க்குரு தோன்றுகிறது.

வியர்வையால் சிறிய கட்டிகள் வருவம் இதனை வேர்க்குரு’ அல்லதுவியர்க்குரு’ (Prickly Heat) என்று அழைக்கப்படுகிறது. வியர்க்குரு என்பது தொந்தரவு தான், வியாதி கிடையாது. இதை குறித்து மிகப்பெரிய அளவில் பயப்படத்தேவையில்லை. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

வியர்க்குரு யாருக்கெல்லாம் வரும்?

கோடையில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வியர்க்குரு பிரச்னையில் இருந்து விடுபட எளிய வழிகள்:

1) கோடைக்காலத்தில் அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடிய நுங்கு. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வியர்க்குரு நீங்கும்.

2) வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவை வியர்க்குருவைப் போக்க உதவுகிறது

3) இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.

4) வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்துத் தடவினால் வியர்க்குவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

5)அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

6) மஞ்சள், சந்தனம், வேப்பிலை ஆகியவற்றை அரைத்து தேய்த்து குளித்தால் வியர்க்குரு மறைந்துவிடும்.

7) பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிப்பதும் நல்லது.

8) கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

9) உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

10) நேரம் தவறித் தூங்குவது கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.

11) குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு வராது.

12) சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.

Read More: ‘IIT பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை கிளாஸ்மேட்ஸ் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்..’ இணையத்தில் வைரல்!

Advertisement