ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு.! அமலாக்கத்துறை அதிரடி.!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நில மோசடி மற்றும் முறைகேடான பண பரிமாற்றம் போன்ற குற்றங்களுக்காக அமலாக்கத்துறை விசாரித்து வந்த நிலையில் அவரை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரது கைதுக்கு பிறகு ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சிபி சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நீதிமன்ற அனுமதியுடன் கலந்து கொண்டார்
இந்நிலையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வரின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதாக சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.