For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னைவாசிகள் கவனத்திற்கு... மழை பாதிப்பு தொடர்பான புகார் தெரிவிக்க உதவி எண்கள்...! தமிழக அரசு அறிவிப்பு

Helpline numbers for rain damage complaints.
06:54 AM Oct 16, 2024 IST | Vignesh
சென்னைவாசிகள் கவனத்திற்கு    மழை பாதிப்பு தொடர்பான புகார் தெரிவிக்க உதவி எண்கள்     தமிழக அரசு அறிவிப்பு
Advertisement

சென்னையில் பொதுமக்கள் மழை நீர் தேக்கம் தொடர்பான புகார்கள் அல்லது ஏதாவது நிவாரண பொருட்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை 2 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது. 1913, 044-2561 9207, 044-2561 9204, 044-2561 9206, 89911 24176, 89911 24175, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் பகுதியின் மழையின் பாதிப்புகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதே போல, தாம்பரம் மாநகராட்சி சார்பில், 18004254355,18004251600,வாட்ஸ் ஆப் எண்: 8438353355 ஆகிய உதவி எண்கள் அ அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422 2302323 , வாட்ஸ் அப் எண் 81900 00200 ஆகிய எண்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மண்டல வாரியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது, வடக்கு மண்டலம் 89259 75980, மேற்கு மண்டலம் 89259 75981, மத்திய மண்டலம் 89259 75982, தெற்கு மண்டலம் 90430 66114 கிழக்கு மண்டலம் 89258 40945 ஆகிய எங்களில் புகார் தெரிவிக்கலாம். மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook, @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Tags :
Advertisement