Helmet | இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..? போக்குவரத்துத்துறை அதிரடி..!! வெளியான அறிவிப்பு..!!
சமீப காலமாக சாலை விபத்துக்கள் மூலமாக உயிரிழப்புக்கள் மற்றும் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, சாலை விபத்துகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு போக்குவரத்து துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால், தற்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினாலும், ரூ.2,000 விதிக்கப்படும் என்று புதிய விதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து அதன் ஸ்ட்ரீப் அணியாமல் சென்றால், ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஓட்டுநர்கள் பிஐஎஸ் அங்கீகாரம் இல்லாத அல்லது குறைபாடுகளுடன் மட்டுமே அணிந்தால் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதன் நோக்கம் இரண்டு சக்கர வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும்போது, ஓட்டுனர்கள் தரமான ஹெல்மெட் அணிந்திருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பதே.
Read More : Annamalai | மக்களவை தேர்தலில் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டி..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!