கனமழையால் Airtel, Jio-க்கு பாதிப்பு வருமா..? அவசர கட்டுப்பாட்டு மையத்திலேயே முகாமை போட்ட அதிகாரிகள்..!!
தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது. அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் செல்போன் சேவை தடைபடாமல் இருக்கும் வகையில், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் கணிகாணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நிறுவனத்தின் சேவை துண்டிக்கப்பட்டால், மற்ற நிறுவனங்களின் உதவியுடன் செல்போன் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.