முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rain: வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை!… மேற்கூரை இடிந்து விழுந்ததால் கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்பு!

09:28 AM Apr 01, 2024 IST | Kokila
Advertisement

Rain: அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, விமான நிலையத்தில் வெள்ள நீர் நிரம்பி வழிந்தது. இதனால், விமான நிலை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

வடமாநிலமான அசாமில் திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிகாரிகள் ஆறு விமானங்களை வேறு இடங்களுக்கு திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.

இந்நிலையில் புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக விமானநிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Readmore: Modi: தேர்தல் பத்திர விவகாரம்!… பிரதமர் மோடியின் விளக்கமும்!… சரமாரி கேள்வியும்!

Tags :
கவுகாத்தி விமான நிலையத்தில் பரபரப்புமேற்கூரை இடிந்து விழுந்து விபத்துவடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை
Advertisement
Next Article