கனமழை எதிரொலி..!! கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.3) விடுமுறை..!!
கனமழை எதிரொலியாக முதல் மாவட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மாற்ற மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் சில உள் மாவட்டங்களை புயல் புரட்டிப் போட்டுள்ளது. தொடர்ந்து, பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி, ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பல மாவட்டங்களில் வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
Read More : வானில் 6 முறை வட்டமடித்த துணை முதல்வர் உதயநிதி சென்ற விமானம்..!! சேலத்தில் பரபரப்பு..!!