For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rain: தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..! வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!

05:30 AM May 06, 2024 IST | Vignesh
rain  தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை    வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
Advertisement

நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒருசில இடங்களிலும், 9-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 109 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 87 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement